11 கருத்துரைகள்
  1. முன்னுரை பற்றிய உங்கள் விளக்கம் நன்று..

    தொடர்பதிவிலேயே ஒரு தொடரும்.... :) நல்லது. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. உங்களை இன்னுமொரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார் என் துணைவி.

    http://kovai2delhi.blogspot.com/2011/07/blog-post_23.html

    சமயம் கிடைக்கும் போது தொடருங்கள்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தொடர் பதிவைத் தொடரும் பதிவாக்கி நன்கு எழுதியுள்ளீர்கள்.
    தங்களின் இந்தப்பதிவின் ஆரம்ப முன்னுரையே மிக நன்றாக, மிகவும் யதார்த்த நிகழ்வுகளாக இருந்தன.

    நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வண்ணதாசனில் தோய்ந்த மனசு..
    அவசர யுகப் படிப்புக்கு அவரிடம் போக முடியாது.
    யாரும் தொந்திரவு செய்யாமல் தனிமை கிடைத்து வாசிக்க வேண்டும்..
    அவ்வப்போது நம்மை நமக்கே தரிசனம் காட்டும் வர் படைப்புகள்

    ReplyDelete
  6. \\\எங்கே பெண் பிள்ளைகள் கூடி விளையாடுகின்றார்களோ, எங்கே குரவை சத்தம் போடுகிற தாய்மார்களுக்கு மத்தியில் புதிய குழந்தை பிறக்கிறதோ அங்கிருந்தெல்லாம் நாம் கவிதைகளை மொழிபெயர்த்து நமக்கு மத்தியில் பகிர்ந்து கொள்வோம்.
    வாழ்வு தானே கவிதை. வாழ்வு தானே கலை. வாழ்வு தானே எல்லாம்!///

    ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங்
    கோற்றொடியார் குக்கூவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
    .................................................
    நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
    பாட்டினிலும் நெஞ்சைப் பறி
    கொடுத்தேன் பாவியேன்."
    -- என்கிறான் பாரதி.

    வாழ்வின் சுக துக்கங்களைப் பாடாத இலக்கியங்கள் நிலைப்பதில்லை.

    இலக்கியத்தரம் வாய்ந்த பதிவு. நன்றி

    ReplyDelete
  7. “வெறுப்பின் தகிக்கும் குழம்புகள் வாழ்வின் முகடுகளிலிருந்து சதா வழிந்து கொண்டிருக்க, அதை அன்பு எனும் பீற்றல் துணியைக் கண்ணில் கட்டி மறைத்து பொய்யாக்கி விடுவது போலக் குற்றம் சாட்டுகிறார்கள். உலகம் வண்ணத்துப் பூச்சி மயமானது என்று யாரும் சொல்லவில்லை. வண்ணத்துப் பூச்சியே அற்றது என்றும் யாரும் சொல்ல முடியாது. முழுக்க முழுக்க நாம் அன்பற்றவர்களாகியா போனோம்? இன்னும் இல்லையே..."

    அருமையான வரிகள்!
    அழகான விமர்சனம்!
    அடுத்த பகுதியில் மறுபடியும் சந்திக்கிறேன்!!

    ReplyDelete
  8. வாசிக்க வாசிக்க தமிழ் இனிக்கிறது !

    ReplyDelete
  9. மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் முழுதும் எழுதி முடித்தபின் பகிர்கிறேன். சமயங்களில் நூல்களை விட முன்னுரைகள் மிகவும் சுவராஸ்யமாகி விடுகின்றன.

    ReplyDelete
  10. சாப்பிடும்போதும் தூங்கப் போகும் போதும் படித்தேயாக வேண்டும். புதிதாக ஒன்றும் கிடைக்க வில்லையானால் படித்ததையே பலதடவை படித்ததுண்டு. //
    மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete