நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

மரங்களின் மக(ரு)த்துவம் வில்வம்- பகுதி:2

Tuesday, 28 February 2012 8 கருத்துரைகள்

      நம் இந்திய ஆன்மீக வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் நம் வாழ்வியல் சம்பந்தப்பட்டவைகளாகவே இருப்பது கண்கூடு. அந்த வகையில் சிவ பெருமானின் அர்ச்சனைக்கு உகந்ததொரு பத்திரம் வில்வம். அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த வில்வ இலைகளை சில காலங்களில் பறிக்கக் கூடாது என்கின்றனர் ஆன்றோர். அக்காலங்களாவன:
திங்கட்கிழமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, அம்மாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு ஆகிய காலங்கள். இக்காலங்களைத் தவிர்த்து மற்ற காலங்களில் வில்வம் எடுத்து வைத்துக் கொள்ளலாமாம். பயபக்தியுடன்

படத்திற்கு நன்றி : திருமதி. சாரதா சுப்பிரமணியம்

       இந்த வில்வதள்ம் 14 இலைகளைக் கொண்டது,ஒரு ஆதீனத்தின் தோட்ட்த்தில் எடுத்தது

நன்றி: எழுத்தாளர்  பவள சங்கரி.
                http://www.vallamai.com/common/crop-bit/16864/கண் நோய்க்கு மற்றுமொரு பக்குவம்:

மரங்களின் மக(ரு)த்துவம் - வில்வம் (பகுதி - 1)

Monday, 27 February 2012 9 கருத்துரைகள்
      சிவாலயங்களில் வில்வார்ச்சனை உயரியது. வில்வதளத்தில் ஒரே காம்பில் மூன்று இலைகள், ஐந்து இலைகள், ஏழு இலைகள் கொண்ட மரங்கள் உண்டு. மூன்று வகையும் மருத்துவச் சிறப்பு மிக்கதே.

இரத்த சுத்தி:       வில்வத்தின் துளிர் இலைகளை அரைத்து மிளகளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வேளைக்கு இரண்டு மாத்திரைகளை வெந்நீருடன் உட்கொள்ள இரத்தம் சுத்தியாகும். தொடர்ந்து 48 நாட்கள் உட்கொள்ள மேக நோய்கள் குணமாகும்.

சரும நோய்கள்:       வில்வ இலைகளைச் சேகரித்து வெயிலில் நன்றாக உலர்த்தி பொடித்து சலித்துக் கொள்ள வேண்டும். இரண்டு தேக்கரண்டி தூளை பசுமோரில் கலந்து ஒரு நாளைக்கு இரு வேளை உட்கொள்ளவும். தொடர்ந்து மூன்று நாட்கள் உட்கொள்ள எல்லாவிதமான சருமப் பிணிகளும் நீங்கும். இரத்தம் சுத்தியாகும்.
       இந்த தூளை சோப்புக்குப் பதிலாக அன்றாடம் தேய்த்துக் குளிக்க சருமம் பட்டு போலாகி தோல் நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
        இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குளித்து வந்தாலும் தோல் மென்மையும் பளபளப்பும் பெறும்.
          காய்ந்த வில்வ மலர்களை சேகரித்து தூளாக்கி சம அளவு சீயக்காய் தூளுடன் கலந்து அன்றாடம் காலை உடலில் தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் வராது. மினுமினுப்பும் கவர்ச்சியும் அதிகரிக்கும்.

ஆஸ்த்மா:        அதிகாலையில் ஐந்து வில்வ இலைகளையும் ஏழு மிளகையும்

“மின்மினிகளால் ஒரு கடிதம்”- அப்துல் ரஹ்மான்

Tuesday, 14 February 2012 20 கருத்துரைகள்
*விளக்காக எரித்தல்
விட்டிலாக எரிதல்
வேறென்ன இருக்கிறது
காதலில்?
^^^^^^^^^^^^^^^
*நான் தவளை
என் கிணறு நீ
இது என் பெருமை.
^^^^^^^^^^^^^^^^
*நீ காற்று நான் சுடர்
என்னை
எரிப்பதும் நீதான்
அணைப்பதும் நீதான்.
^^^^^^^^^^^^^^^^^

*நான் தோணி
நீ கரையா? புயலா?
தெரியவில்லை.
^^^^^^^^^^^^^^^^^^
*சுடரின் ஒளியாய்
சுவரில் ஆடும்
நிழல்கள் நாம்.
^^^^^^^^^^^^^^^^^^
*உன் சிரிப்பில் சுரந்த
கண்ணீர் போல்
பூவில் பனித்துளி.
^^^^^^^^^^^^^^^^^
*நான் வெறும் ஓட்டை மூங்கில்
காற்றும் நீ
வாயும் நீ
விரலும் நீ.
^^^^^^^^^^^^^^^^^^
*காதல் தோல்விக்கு
ஏன் கலங்குகிறாய்?
அது வாழ்க்கையின்
வெற்றிகளை விட
உயர்ந்தது.
^^^^^^^^^^^^^^^^^^^^
*விளக்கிடம் விட்டில் சொன்னது
எரிப்பதில் இருக்கிறது
உன் பெருமை
எரிவதில் இருக்கிறது
என் பெருமை.
^^^^^^^^^^^^^^^^^^^^
*உன் நதியில் நானொரு துளி
என் விதியில்
நீயோர் எழுத்து.
^^^^^^^^^^^^^^^^^^^
*இந்தப் பனித் துளிகள்
இரவு யாருக்காகவோ
அழுதிருக்கின்றன
என்னைப் போலவே.
^^^^^^^^^^^^^^^^^^^^
*மேகமாகி
உன்னைப் பிரிவதும்
நதியாகி
உன்னைத் தேடிவருவதும்
எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
*உன் கோபமும் எனக்கு இன்பம்தான்
எனக்குத் தெரியும்
எனக்கு நீ
நெருப்பால் எழுதும் காதம் கடிதமது.
^^^^^^^^^^^^^^^^^^^^^
*தரைக்குத் தண்ணீர் மேல் தாகம்
தண்ணீருக்கு தரைமேல் பசி
உன்னையும் என்னையும் போல்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
*காதலின் நஞ்சைக் குடித்தே
சாகாமலிருப்பவன் நான்!
மரணமே!
என்னை என்ன செய்யமுடியும்
உன்னால்?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அஃறிணை! உயர்திணை...?

Wednesday, 8 February 2012 11 கருத்துரைகள்
உதிர்க்கும் இலைகளைத்
துளிர்த்துச்
சமன்செய்து விடுகிறது
மரம்!கழியும் நாட்களை
வாழ்வின் கணக்கில்
கூட்டவியலா
பெரும் திகைப்பில் நாம்...!

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar