நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

ஒரு எட்டாம் வகுப்புப் பெண்ணின் ஐயப்பாடுகள்...

Sunday, 27 January 2013 15 கருத்துரைகள்

1. கடவுள் இருக்கிறாரென்றால், எங்கு, எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்?

2. அவர்தான் நம்மைப் படைத்தாரா? நிற வேறுபாடு, தோற்ற வேறுபாடு, பொருளாதார வேறுபாடுகளுடன் படைத்தது ஏன்?

3. அவருக்கு மாபெரும் சக்தி உண்டென்றால் இவ்வேறுபாடுகளை சரிசெய்ய முடியாதா?

4.அர்ச்சனை, அபிசேகம், ஹோமம், மணியடித்தல், மந்திரஜபம், ... இப்படியான வழிபாடுகள் துவங்கிய காரணம்?

5. விரதம், தீ மிதித்தல், அலகு குத்துதல், முள் செருப்பு அணிதல், அங்கப் பிரதட்சிணம், அடிப்பிரதட்சிணம், மண் சோறு சாப்பிடுதல், கையில் சூடம் ஏற்றுதல் போன்றவற்றுள் சில நம் உடல்நலத்துக்கானது என்றால் இவற்றை கடவுள் பெயர் சொல்லி செய்வதுதான் உண்மையான பக்தியா?

6. இவ்வளவு செய்தும் வேண்டியது கிடைக்காமல் போவது ஏன்?

7. கடவுள் உண்டென்பதற்கும் இல்லையென்பதற்கும் ஆதாரம்?

8. மோட்சம் அடைய வேண்டுமென்பது கட்டாயமா? அடையாவிட்டால் என்ன ஆகும்?

9. மோட்சம், ஞானம் அடைய தங்கள் வாழ்நாளைச் செலவழித்த பலர் அவற்றை அடைந்து விட்டனரா?

10. பாவம், புண்ணியம்; சொர்க்கம், நரகம் இதெல்லாம் உண்டா?

11. நாம் இறந்தவுடன் நம் உயிர் எங்கு செல்லும்? அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிறக்கப் போகும் உடலிடம் போய்ச் சேரும் என்பது உண்மையா?

12. தப்பு செய்தால் பரிகாரம் செய்ய வேண்டுமா?

13. ஆத்மா சாந்தியடையாமல் செல்வது என்றால் என்ன? ஆவிகள் உண்டா?

14. எமன் என்றொருவன் உண்டா?

15. நம் வீடுகளில் தேவதைகள் ஒளிந்து கொண்டு ‘ததாஸ்து' என்று கூறுவது உண்மையா?

16. ஜன்மங்கள் உண்டா?

17. கருநாக்கு உள்ளவர்கள் என்ன சொன்னாலும் பலிக்குமா?

18. தீய சக்திகள், பேய் போன்றவை உண்டா?

19. அவற்றை எதிர்த்து நாம் முடிகயிறு அணிய வேண்டுமா?

20. ஜீஸஸ் தலைமுறை தொடர்வதை ஒப்புக்கொள்ளாத சமுதாயம், பிள்ளையாருக்கு அம்மா, அப்பா, தம்பி என உறவு உள்ளதை மறுப்பதில்லையே?

21. சாமி வருவது, சாமி ஆடுவது உண்மையா?

22. கல்லிலும் இருக்கும், கனியிலுமிருக்கும், நீரிலுமிருக்கும், பூவிலுமிருக்கும், நம்முள்ளிருக்கும் கடவுள் மொத்தத்தில் ஒன்றா? பலவா?

23. கடவுள் நல்லவர்களை மட்டும் அதிகம் சோதிப்பது ஏன்?

(ஒரு சிற்றிதழாளர் தன் நண்பரிடம் இதழில் புதிதாக துவங்க இருக்கும் கேள்வி-பதில் பகுதிக்கு அரசியல், அறிவியல் ஆன்மீகம் எதுவாயினும் கேள்விகள் எழுதித் தரும்படி கேட்க, நண்பர், தன்   மகளிடம் சொன்னார். ஆம். உங்க யூகம் போல் அச்சிற்றிதழில் கேள்வி-பதில் பகுதி நின்று விட்டது.)

நினைவோ, ஒரு பறவை...

Thursday, 10 January 2013 11 கருத்துரைகள்
             பண்டிகை என்றாலே பெண்களுக்கு கடும் வேலைச் சுமை! ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விதமான நேர நெருக்கடியையும் உடல்  சோர்வையும் தர மறப்பதில்லை. இருந்தாலும் பண்டிகைகளையும் பாரம்பர்ய பழக்கவழக்கங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது பொறுப்பாகிறது. குடும்பத்தினரின் குதூகலத்துக்காக தரப்படும் விலை அது.

“உன்னால் முடிந்ததை செய்; முடிந்த போது செய். பண்டிகை என்பது கொண்டாட்டமாக இருக்கவே. கட்டாயம் செய்தாக வேண்டுமென இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து சிரமப்படாதே; சிரமப் படுத்தாதே. சுத்தப் படுத்தும் நாட்களையும், பட்சணம் செய்யும் நாட்களையும் நமக்கான பண்டிகை நாட்களாக நினைத்துக் கொண்டால் போயிற்று. நியதிகளை விலங்குகளாக்கிக் கொள்ளாதே”

இது எல்லா பண்டிகைக்கு முன்னும் என் கணவர் அன்போடு சொல்வது.

காவிரியின் பாராமுகத்தால் எந்த விவசாயியும் தம் வீட்டு நெற்களஞ்சியங்களை தை முதல் நாளுக்காக சுத்தம் செய்ய அவசியமற்று அல்லவா போனது! கண்ட சொற்பத்தையும் களத்திலேயே வந்த விலைக்கு தள்ளியல்லவா வரும் நாட்களை அவன் தள்ளியாக வேண்டும்?! பணப்புழக்கம் பகல்கனவான பின் களஞ்சிய அறைகளையெல்லாம் காற்றோட்டத்துக்கு சன்னல் வைத்து வீட்டுப் புழக்கத்தை விசாலமாக்கிக் கொண்டனர் பலர்.

மாத சம்பளக்காரர்கள் பாக்கியவான்கள். தடங்கலில்லாமல் வண்டி ஓடுவதால்... கடையில் சன்ன ரக, உயர்ரக அந்த ரக இந்த ரக அரிசியெல்லாம் விலைக்கு கிடைத்து விடுவதால்... அவசியமெது அனாவசியமெதுவென திட்டமில்லாமல் வரும்படி போதாமல் திண்டாடுபவர்களுக்கும் வட்டிக்கு கடன் பெற ஆயிரமாயிரம் வழிகள் காட்டப்படுவதால்...

 
          பிள்ளைகளிருவரும் வீட்டிலில்லாததால் அவர்கள் அறையை தூசு தட்டினேன் நேற்று. மகளின் அறையில் தன் மூன்றாம் வகுப்பு படித்த காலத்திலிருந்து பத்திரப்படுத்தியிருந்த அவளின் சேகரிப்புகளை (ஞாபகார்த்தங்களை) சுத்தப்படுத்திக்கொண்டிருந்த போது நழுவி விழுந்ததொரு  கடிதம். மகள் ஒன்றரை வயது சிறுமியாயிருந்த போது எங்கம்மா எனக்கு எழுதிய கடிதம் அது.

      அன்பிற்குரியவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஏதேனுமொரு பொருள் இருக்கும் என்னிடம். அவற்றைப் பத்திரப் படுத்தி அவ்வப்போது எடுத்துப் பார்த்து அவைகளில் அவர்களைக் கண்டு நெகிழ்ந்து....  எங்கம்மா பெட்டியில்  கோளவடிவ எவர்சில்வர் தட்டு ஒன்று இருக்கும். அவங்க அண்ணன் சாப்பிட்டதாம். அண்ணன் இறந்து பல வருடங்களாகியும் அதைப் பூட்டி வைத்துக் கொண்டிருந்த அம்மாவை என் சிறு பிராயத்தில் புரியாமல் பிரம்மித்திருக்கிறேன். காலம் எனக்குப் புரிய வைத்தது. இப்போது என் மகளுக்கும்.

வளர்ந்தபின் என் சேகரிப்பிலிருந்த அக்கடிதத்தை தனக்கென பத்திரப்படுத்திக் கொண்டாள் மகள். தூறலில் துளிர்த்த அருகாய், புரண்டெழும் அலையில் உருண்டு வரும் சிப்பியாய் நினைவுகள் ...

அடுப்பில் பொங்கும் பொங்கல் அன்றைய உணவாய் வயிற்றுக்கு . இந்த நினைவுப் பொங்கல் மனசுக்கு. வீட்டு தெய்வத்தை கும்பிட மாட்டுப் பொங்கல் வரை காத்திருக்க வேண்டுமா என்ன? தொடங்கிவிட்டது நினைவுகளின் தொழுகை. சிறகு விரித்த நினைவுப் பறவை கூடடைய  ஆகும் சில பொழுது.

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar