நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

திருச்சியிலிருந்து திக்கெட்டும் முழங்கும் ஓர் உரத்த ஒலி ...

Thursday, 23 May 2013 16 கருத்துரைகள்


         "ஒரு பயனுள்ள புத்தகம் படிக்கும் சுகம் என்பது தேநீர் குடிக்கும்  ரசனா அனுபவத்துக்குச் சற்றேனும் குறைந்ததல்ல.அது பாதை காட்டும். புதியவாசல்களைத் திறந்து வைக்கும். ஒரு நல்ல நண்பனைப்போல் எப்போதும் அது உங்களோடு கூட வரும்.

          புத்தகம் நமக்குள் இருக்கின்ற நம்மை; நமக்கு மட்டுமாக வாய்த்திருக்கும் ஓர் அழகியலை எப்படி அடையாளம் காண்பது அதனை எப்படி வளர்த்தெடுப்பது அதில் நாம் காணக்கூடிய ஆத்மார்த்த திருப்தி எப்படியானது என்பது பற்றியது. உனக்குள் இருக்கும் உன்னை கண்டு பிடி என்பதே அதன் தொனிப்பொருள். அதற்கு அது கைபிடித்து வழிகாட்டிச் செல்கிறது. ஒரு பேரன்புத்தாயாக தன் பாசமிகு பிள்ளையை கை பிடித்து ”உள்நோக்கி” பக்குவமாய் நம்மை அழைத்துச் செல்கிறது அது." (நன்றி: http://akshayapaathram.blogspot.in/2013/05/2.html)

           திருச்சியிலிருந்து திக்கெட்டும் முழங்கும் ஓர் உரத்த ஒலியாக கவிஞர் தனலட்சுமி பாஸ்கரனின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு  "பறையொலி" நூல் வெளியீடு சேலத்தில் நிகழவிருக்கிறது.

       வாழ்த்துவதால் நம் மகிழ்வையும் வருகையால் இரட்டிப்பு நெகிழ்வையும் அவருக்குப்  பகிரலாம் வாருங்கள்...

உயிரின் உயிரே...

Sunday, 12 May 2013 12 கருத்துரைகள்

           நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது (1985) எனது தந்தையார் மரணிக்கிறார் திடீரென. தன் 63 வருட வாழ்நாளில் சம்பாதித்த பெயர், புகழ், பணம், சொத்து, சுகம், மனைவி குழந்தைகளை விட்டு விடுதலையானது அவரது ஆன்மா. சம்பிரதாயச் சடங்குகள் முறையாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன எங்கள் கிராமத்து முதியோரின் வழிகாட்டலின்படி. மயானம் செல்ல வாசலில் தயாராய் அப்பாவின் உடல். உறவினர்களோடு மும்முறை வலம் வந்து விழுந்து வணங்குகிறோம். கூட்டம் சிறு அதிர்வோடு சலசலத்து அமைதியாகிறது. ஏனெனில் மூன்றாவது சுற்றில் யாரும் எதிர்பாரா தருணத்தில், எனது அம்மா தனது திருமாங்கல்யச் சரடை கழற்றி அப்பா கையில் போட்டுவிட்டார்! பதினாறாம் நாள் காரியத்துக்கு முன் இரவில் அதற்கான சடங்குகள் எல்லாம் அந்தரத்தில்! 

பெண் என்பவள் ஆணுக்காகவே படைக்கப் பட்டவள் என்பதும், திருமணம், குடும்பம், குழந்தை பெறுதல் எனும் தளைகளால் பிணைக்கப் பட்டவள் என்பதும், கணவனை இழந்தால் பின்பற்ற வேண்டிய கொடூர சடங்குகளும் சம்பிரதாயங்களும் எந்தளவுக்கு உறுத்தலாய் இருந்திருக்கின்றன? உடன்கட்டையேறியவர்களையெல்லாம் கேள்விப்படும் நாம் படிப்படியாக கட்டுடைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். வெட்ட வெட்டத் துளிர்க்கும் முருங்கையாய், வேரோடிய அருகு நீர்ப்பசை கண்டதும் துளிர்ப்பதுபோல் கண்ணுக்குப் புலனாக மூக்கணாங்கயிறுகள் கணக்கற்று வெளிக் கிளம்பியபடிதான் இருக்கின்றன.

தன் இருபது வயதில் நாற்பது வயது தாய்மாமனுக்கு இரண்டாம தாரமாக வாழ்க்கைப்பட்ட அம்மாவுக்கு எங்கிருந்து வந்தது இவ்வேகமும் விவேகமும்?! அவர் கடந்து வந்த வாழ்வல்லவா அவர் சிந்தனையை புடமிட்டு மெருகேற்றியிருக்கக் கூடும்! எங்க ஊரில் அதுவரை கணவரை இழந்த பெண்கள் சிவப்பிலோ வெண்மையிலோ நூல் சேலை அணிந்திருக்க அப்புடவை நிறத்தை பொடிக்கலருக்கு மாற்றிக் கொண்ட அம்மாவுக்குப் பின் கணவனை இழந்த பெண்கள் அதையே பின்பற்றினர். ஆக,  சிறுமை கண்டு பொங்கவும், முதலடி எடுத்து வைக்கவும்  துணிவுதான் வேண்டியிருக்கிறது. மாற்றத்தை ஏற்கிற மனோபாவம் அனைவருள்ளும் உள்ளது...

         ஆதிலட்சுமியை நிலாமகள் ஆக்கியதில் அவரது மரபணுக்களின் பங்குமிருக்கலாம். 

என் சுவாசக் காற்றிலும்
நான் பருகும் நீரிலும்
உலகை தினந்தினம் 
ஒளியூட்டும் பகலவனிலும்
கண்ணுக்கெட்டா தொலைவிலிருந்தும்
காதுக்கெட்டும் கோயில் மணியின்
ஓம்கார ஒலியிலும்
பாதையெங்கும்
மிதிபடும் மண்ணிலும்
அணுத்தொகுப்பாய்
அடிமனசில் அருவுருவாய்
உயிர்த்திருக்கிறாய் அம்மா...
என்னுயிர் உள்ளமட்டும்!


ஞிமிறென இன்புறு

Friday, 3 May 2013 14 கருத்துரைகள்
   
   'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்தையின் தமிழறிவை வளர்க்க என்னைக் கிளறிவிட்டார் ஒரு இளைஞர். அதன் பயனாய் விளைந்தது கடந்த பதிவின் அசை. (நேரம் வாய்க்கும் போது 'அசை'த்துப் பார்க்கலாம் 'அந்த நாள் ஞாபகங்களை'.)


      அந்தக் காலத் தமிழ்வழிக் கல்வியில் அனேகமாக இரண்டாம் மூன்றாம் வகுப்புகளில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற அறநெறி - நீதிபோதனைகள் குழந்தைகள் மனசில் உருவேற்றப் பட்டிருக்கும். அவற்றில் பலவற்றின் அர்த்தத்தை காலப் போக்கில் வாழ்வியல் சூழலில் உணர்ந்திருப்போம்.     
நம் நண்பரின் கோரிக்கை என்னவென்றால், நீதி நூல்களையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதில் பெற்றோராகிய நம் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்பதே. ஞிமிறென இன்புறு, இளைத்தல் இகழ்ச்சி போன்ற புதிய ஆத்திசூடி சுட்டும் கருத்தை  இக்காலக் குழந்தைகளுக்கு போதிக்க உதவும்படி எழுதலாமே நாம்        
நியாயம் தான். பள்ளியில் மனப்பாடம் செய்ய மட்டுமே கற்பிக்கப் படுகிறது. பொருள் புரிந்து படிக்கச் செய்வது பெற்றோரின் பொறுப்புதான் தாய்மொழியளவில்.         ஞமலி என்றால் நாய் என்பதும் ஞிமிறு என்பது பூச்சியில் ஒரு வகை என்பதும் இக்காலக் குழந்தைகளில் எத்தனை பேருக்கு தெரியும்? வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களை மறுபடியும் பயன்பாட்டில் கொண்டுவருவது தமிழ் நேயர்களின் பொறுப்பே.
       
நண்பருக்கான ஞிமிறு பற்றி விக்கிபீடியாவில் தேடியபோது இன்னும் பலதினுசு பூச்சிகளின் பட்டியல் வியப்பில் ஆழ்த்தியது என்னை. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
தேனீயின் கொடுக்கு
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80)ஞிமிரென இன்புறு – ENJOY YOUR WORK LIKE BEESதேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.( இதை வைத்தே பல கதைகள் சொல்லி குழந்தைகளை நெறிப்படுத்தலாம் போலிருக்கே)வண்டு, தேனீ, ஞிமிறு, சுரும்பு இவை ஒன்றைக் காட்டிலும்  ஒன்று பெரியவை
என்று ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. 'ஞிமிர்'  என்பது வண்டுகளின் ரீங்காரம் என்றும், 'ஞிமிறு' என்பது தேனி என்றும் அறியப் படுகிறது.Advisor, Adviser இரண்டுமே சரி என்று ஆங்கிலம் சொல்கிறது.  இப்படி இரண்டு எழுத்தமைப்புகள் கொண்ட சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன.ஆகவே, வல்லின இடையினங்கள் இரண்டு வடிவமுமே இச்சொல்லுக்கு உண்டு. (இதுபோன்ற இன்னொரு சொல் வரள்.  நாக்கு வரண்டுவிட்டது; தொண்டை வறண்டுவிட்டது இரண்டுமே சரி.  ஆனால் வறட்சி ஒப்புக்கொள்ளப்பட்ட ஆட்சி; வரட்சி பரவலாகாத ஒன்று.)  ஞிமிறென இன்புறு - இதனை இன்னும் எளிமையாகவும் செறிவாகவும் கற்பிக்க உங்கள் சிந்தனைகளையும் பின்னூட்டமாக எதிர்நோக்குகிறேன்.  நன்றி:'மாமியாரே' தொனியில் 'தோழியாரே' என்று என்னை விளிக்கும்  ஹரிக்ரிஷ் அப்பாவும் கிருஷ்ணப்ரியாவின்(http://krishnapriyakavithai.blogspot.in/) பாசக்கார தம்பியுமான     கண்ணன் http://kannan2771.blogspot.in/

குறிப்பு : http://nchokkan.wordpress.com/2013/02/25/  இந்தச் சுட்டியில் ஞகரம் பற்றிய சுவையான அலசல் இருக்கிறது. பாருங்களேன்...
              
உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar