நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

ஒரு தூரிகையின் சிலிர்ப்பில் தெறித்த சில கவிதைகள்

Thursday, 30 January 2014 11 கருத்துரைகள்
நூல் பெயர்:எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை
ஆசிரியர்:- ப. தியாகு (80123 30511)
வெளியீடு: வெயில்நதி (99411 16068)
பக்கங்கள்: 80
விலை: 70/-

        “பார்த்ததில் பார்க்காததையும், கேட்டதில் கேட்காததையும் உணர வைப்பது கலையின் அடிப்படைச் செயல்பாடு” என அணிந்துரையில் இருவரியில் அடக்குகிறார் கவிதைவெளியில் நெடுந்தூரம் பயணித்திருக்கும் திரு.சமயவேல்.
        நிலா உடைய, சூரியன் சிதறியதாம். என்னடா இது அதிசயம் என்று பார்த்தால், நிலா வடிவ கோழிமுட்டையொன்று கைதவறி விழ, உள்ளிருந்த மஞ்சள் கரு சிதறி கவிச்சை வாடையோடு சூரியன் தகிப்பது போல் தெரிந்திருக்கிறது தியாகுவின் கவிமனசுக்கு.
         மரக்கிளைகளில் பச்சைப் பாம்பு போலவும் சிறுகொடிபோலவும் தோற்றப்பிழையாக ‘நீ' எனக்கு யாதுமாகி நின்றாய் என்பதாக மற்றொரு கவிதை. ‘நீ' மனம் கவர் காதலியாகவுமிருக்கலாம்; மனதுக்கினிய மழலையாகவுமிருக்கலாம். வரிகளில் வழியும் கவித்துவம் வாசிப்பவர் மனசை சிலுசிலுக்கச் செய்கிறதென்பதை மறுக்க முடியுமா?!
        கூண்டுப் பறவை ஆரூடம் மட்டுமா சொல்கிறது?

வீழ்ந்தவன்!

Tuesday, 7 January 2014 11 கருத்துரைகள்


           எம்மாம் நேரம் குந்தி கெடந்தாலும் இந்தாளு மனசு கசியப் போறதில்லஜாங்கிரி உட்கார்ந்திருந்த மணல் திட்டிலிருந்து எட்டி காரி உமிழ்ந்தாள். சின்ன வயசில் கூட்டாளிகளால் வைத்த பட்டப் பெயர் இது. கொண்டவன் வீட்டிலும் நிலைத்து, இப்போது பஞ்சம் பிழைக்க வந்த இடத்திலும் முதலாளியிலிருந்து சக தொழிலாளி வரை ஜானகி என்று கூப்பிடுவார் யாருமின்றி ஜாங்கிரியாகவே இருப்பவள்.
                இத்தனைக்கும் காரணமான அவள் தலைமுடி எண்ணெய் காணாமல் வறண்டு சுருண்டு மேலேறியிருந்தது. எடுத்து ஒரு ரப்பர்பேண்டில் அடக்கி வைத்திருந்தாலும் அந்த அத்துவானத்தின் அந்திக்காற்றில் திமிறிப் பறந்து கொண்டிருக்க, முடிக்கற்றைகளை அடிக்கொரு தரம் இடதுகையால் இழுத்து இழுத்துக் காதோரம் செருகி  மாளவில்லை அவளுக்கு.
                அவள் காலருகே பரட்டை தலையும் ஒழுகும் மூக்குமாய் நிமிர்ந்து பார்த்து சிரிக்கும் ஒன்றரை வயது மகள் செல்லியை இழுத்து முந்தானையை உதறி மூக்கை நோகாமல் துடைத்து விட்டாள். அவளிடமிருந்து திமிறி இறங்கிய அது மண்டியிட்டுவிசுக் விசுக்' என நகர்ந்து அடுத்ததாக குவித்திருந்த கருங்கல் ஜல்லி முட்டில் சட்டமாக உட்கார்ந்து கொண்டது. ரெண்டு நாளாகப் பெய்த மழையில் தேங்கிக் கிடந்த ரோட்டுப் பள்ளத்தில் ஒவ்வொரு ஜல்லியாக விட்டெறிந்து விளையாடத் துவங்கியது.
                அரை கிலோ மீட்டர் தூரத்தில் வந்த தொழிற்பேட்டையால் இந்த இடத்துக்கு பவிசு வந்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்த அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் பெரும்பாலும் கட்டிக் காசுபார்த்துக் கைதேர்ந்த அவள் முதலாளி, அடுத்த  கட்டடத்துக்கான அஸ்திவாரம் போடுவது பற்றி மேஸ்திரிகளிடம் விவாதித்துக் கொண்டிருந்தார்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar