நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

ஒலித்துக் கொண்டேயிருக்கும் 'அவர்களின்' குரல்....

Wednesday, 24 September 2014 5 கருத்துரைகள்
      நேற்று (23.09.2014) கடலூர் அரசு காதுகேளாதோர்  வாய்பேசாதோர்  பள்ளி சென்றோம்.
(Cuddalore deaf and dumb school) தொடர்பு எண் : 04142-221744

ஆசிரியர் மாணவர்களுடன் என் மகளும் (தலைமை ஆசிரியை அருகில்)

மதியம் அவர்களுக்கு உணவளித்து அவர்களோடு உண்டு, பேசி மகிழ்ந்து கழிந்த பொழுது நினைவில் நெடுநாள் நிற்கும்.

பாருங்க... இந்தப் பெண் வளர்ந்து நிற்கும் அழகை...!

அன்று

இன்று .

தத்தம் உடற்குறையை பொருட்படுத்தாது சத்தம் அவசியமற்ற உடல்மொழியால் அவர்கள் சம்பாஷிக்கும் உற்சாகம், சதா சர்வகாலமும் பேசவும் கேட்கவுமாயிருக்கும் நம்மையும் சட்டென பற்றிக் கொள்கிறது. மகிழ்வென்பது கிடைப்பதில் திருப்தியுடனிருப்பதில் தானே...

அங்கிருக்கும் ஆசிரியர்களும் உணவு மற்றும் பராமரிப்புப் பணியிலிருப்பவர்களும் போற்றத் தக்கவர்கள். வேலையை வேலையாக மட்டும் செய்யாமல் காருண்யத்தோடும் செய்ய வாய்ப்பு பெற்றவர்கள்.


தோழமைக்காக ஒரு தொடர்பதிவு...

Monday, 22 September 2014 10 கருத்துரைகள்
     
        சில நாட்களுக்கு முன் மனோ மேம் எனது பதிவிடுதலின் மந்தத் தன்மையை நீக்கும் விதமாக ஒரு தொடர்  பதிவுக்கு அழைத்தாங்க. ஓட முடியாதவன் ஊக்க மருந்து சாப்பிட்ட கதையா நானும் முயற்சி செய்தேன். இதில் கேள்வியும் நானே; பதிலும் நானே. தோழமைப் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பெரியமனசு பண்ணி மன்னிச்சுடுங்க.

தோழமையின் உன்னதம்?

முறையாய் வரும் உறவினைக் காட்டிலும் இயல்பாய் வளரும் தோழமையின் நிலைப்பாடு மிகுதி.

தோழமையின் உன்மத்தம்?

வளரிளம் பருவத்தில் மனசை நிறைக்கும் நட்பின் மீதான அபரிமித நம்பிக்கை; பிரேமை; குதூகலம்.

நட்பின் உரிமைக்கு எல்லை எது?

வாழ்த்துங்கள்; வளர்கிறோம்!

Friday, 5 September 2014 6 கருத்துரைகள்இரண்டு நாட்களுக்கு முன் நண்பரின் மகள், செய்யுள் இலக்கணத்தில் அசைபிரித்து அலகிடுதல் பற்றி சொல்லித் தரச் சொன்னாள். பத்தாம் வகுப்பு பாடத்தில் மட்டுமே இன்னும் இருக்கக் கூடிய ஒரு பகுதி அது.

'நேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா ; .' என மனதில் அதற்கான வாய்ப்பாடுகள் எழும்பின. கூடவே அதைக் கற்பித்த ஆசிரியரும் நினைவில் பிரகாசித்தார்.

பத்தாம் வகுப்புத்  தமிழாசிரியர் கிருஷ்ண மூர்த்தி  சார்  ...

நாங்க பத்தாவது வந்தபோது பள்ளிக்கு புதிதாக மாற்றலில் வந்தவர். கண்ணியமான வேட்டி சட்டையில் கருத்த நெடிய உருவம். (தமிழாசிரியர்கள் வேட்டி  தான்  அணிந்தனர்.இன்றும்  எங்கள் குழந்தைகள் படித்த பள்ளியிலும்!) முகத்தில் எப்போதும் சிறு கண்டிப்பு தெரியும். கம்பீரமான விடுவிடுவென்ற நடை. (பின்னாளில் ஒரு சாலை விபத்தில் கால் அடிபட்டு  சாய்ந்த நிதான நடையில் அவரைப் பார்த்து கலங்கிப் போனோம்.)

தமிழ் மேல் சுவை கூட்டியவர்  அவர் தான். மனப்பாட செய்யுள் தவிர பிற பாடங்களை நாங்கள்  புரிந்து படிக்கவும் நினைவில் நிறுத்தவும் அவர் வெகுவாக பிரயாசைப் படுவார். எங்களின் தமிழ் மன்றத் தேர்வுச் சான்றிதழ்களெல்லாம்  அவரின் ஊக்குவிப்பே.

எங்கிருந்தாலும் நல்லாயிருப்பீங்க சார்... எங்க பிரார்த்தனைகளும் அதுதான்! உங்கள் நல்லாசியில் எங்கள் அறிவு துலங்கட்டும்!!

விரல் பிடித்து எழுதப் பழக்கிய முதல் ஆசிரியரிலிருந்து படிப்படியாக வாழ்வின் பாதையில் கற்பித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்! 

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar