நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

ஆறுதலாய் ஒரு அழுகை

Thursday, 23 April 2015 28 கருத்துரைகள்
                                                
     பதினோராவது தடவையாக கைப்பேசியை உயிர்ப்பித்து  மணி பார்க்கிறேன். வண்டி வரும் தடயமில்லை. 5.35 ஆகிடுச்சு. மத்தியப் பேருந்து நிலையத்தில் 5.20 க்கு சரியா கிளம்பியிருக்கணுமே... கெளம்பறச்சே பேருந்துல தான் ஏதேனும் கோளாறோ... மந்தாரக் குப்பம் போய்விடலாமா? விருத்தாசலம் வழியா வர்ற சேலம் –சிதம்பரம் வண்டி ஏதாவது கெடைக்கலாம்.... சிதம்பரம் போயி மாயவரம் போகணும். ம்ம்ம்...
                என்னோடு புதுக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கும் மர நிழலில் தலை நுழைத்து நிற்கும் சிலரும் பேருந்து வரும் பாதையை நோக்கிய படி மனச் சலனம் புலப்பட தவிப்புடன் நின்றிருந்தனர்.
     கிராமங்களில் குளமிருந்த காலத்தில் கும்மாளம் போடும் சிறுசுங்க  கரையேற மனசில்லாம ஆட்டம் போடுறாப்ல  சூரியன் மேற்கே வேகமா இறங்காத அழும்பினால் உடம்பு  தன் தட்பவெப்பத்தை சமன் செய்துக்க வியர்த்துக் கொட்டுது. பொழுதுக்கும் சூடேறிய தார்ச்சாலையின் வெம்மையில் காற்றும் தாகத்துல தவிக்குது. பையிலிருக்கும் தண்ணீர் பாட்டிலில் கொஞ்சம் நாவறட்சியை பண்டமாற்றினேன்.
                இருக்கிற கவலை போதாமல், இந்நேரம் தான் புறப்படும் அவதியில் தலைவலித் தைலம் எடுத்து வைத்துக் கொள்ளாதது நினைவுக்கு வந்து தொலைத்தது. எப்போதும் ஊர்ப்பயணத்துக்கு எடுத்துப் போகும் பையில் ஒரு தைல பாட்டில் இருக்கும். அதுவும் சாவு வீட்டுக்கு போகும் போது பணப்பை இருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ தலைவலித் தைலம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வேன்.  இன்று வேறு பை.
                சாவு வீட்டில் ஓய்ந்து ஓய்ந்து கேட்குற ஒப்பாரி ஒலியும் பயணக் களைப்பும் தலைவலியை  தட்டியெழுப்பிடும். எந்த பயணத்துக்கும் வீட்டு வாசலைத் தாண்டும் வரைக்கும்  திரும்பி வரும் வரை தேவையான முன் தயாரிப்பு வேலைகளை செய்து முடிகும் அலுப்பு வேறு. சாவு வீடுகளில் மொத்தமாக கலந்து வைத்ததை திரும்பத் திரும்ப சுட வைத்து கொடுத்துத் தீர்க்கும் காபி எனும் தண்டனை இருக்கிறதே... அப்பப்பா. கடமைக்கு வற்புறுத்தி கையில் திணித்துப் போகும் மக்களை பார்த்தாலே மண்டை தெறிக்கும்.. இப்போதெல்லாம் அவங்க திணிச்சுட்டு நகர்ந்தவுடனே உட்கார்ந்த இடத்திலேயே மூலை முடுக்கில் அந்த அரைச் சூட்டுக் கசாயத்தை தள்ளிவிட்டு தப்பிக்க பழகியாச்சு.
                சரி. சிதம்பரத்தில் இறங்கியவுடன் ஞாபகமாக ஒரு தைலம் வாங்கிக்கலாம்இவ்வளவு நேரமாகும்னு தெரிஞ்சிருந்தா கலந்த காபியை ஒரு ஆத்து ஆத்தியாவது குடிச்சிருக்கலாம்... சுட்டுகிட்ட நாக்கு முணங்கியது. எங்க கிளம்பினாலும் எந்த நேரமானாலும் ஒருவாய் காபியை ஊத்திகிட்டு தான் கெளம்பறது. பழகிப்போன பொம்பளைக் குடி. அவரோட வரும்போது சில நேரம் பேருந்து போயிட்டா அடுத்த வண்டி வர்ற வரைக்கும் நிற்கும் போது சொல்லுவார்... “அந்தக் காபியை போடாம கெளம்பி இருந்தா இந்நேரம் போயிட்டு இருக்கலாம்ல”.
                ‘வந்தாரய்யா பெருமாள்' ன்னு விஜயலட்சுமி நவநீதக் கிருஷ்ணன் பாடும் உற்சாகக் குரலில்

தம்பட்டம்

Wednesday, 22 April 2015 11 கருத்துரைகள்
புத்தக ஆக்கத்தில் இரண்டாம் கவிதைத் தொகுப்பு....
(அட்டை வடிவமைப்பு செ சிபிக்குமார்)
  இதுவொரு அறிவிப்பு மற்றும் ஆசி கோரல்...


தயக்கமெனும் சிறுமதி

Saturday, 18 April 2015 12 கருத்துரைகள்


சந்தர்ப்பம் வரும்போது தயாராக இல்லாமல் தாமதிப்பது தோல்வியைத் தான் தரும். முதன் முதல் நிலவுக்குச் சென்ற அப்பல்லோ விண்கலத்தின் முதண்மை விமானி எட்வின் சி.ஆல்ட்ரின். இவர் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண்நடையில் அனுபவம் உள்ளவர் என்பதால் முதண்மை விமானியாக நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் கப்பல் படையில் பணிபுரிந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். நல்ல தைரியசாலி. இவர் துணை விமானியாக (கோ-பைலட்) நியமிக்கப்பட்டார்.

     விண்கலம் நிலவை அடைந்ததும் நாசா விண்வெளி மையத்திலிருந்து பைலட் (எட்வின் சி.ஆல்ட்ரின்) இறங்க கட்டளை பிறப்பிக்கப்பட்டது. புவி ஈர்ப்பு விசையற்ற நிலவில் புதைமணலோ, எரிமணலோ என்ற தயக்கத்தில் சில நொடிகள் எட்வின் தாமதிக்க, நாசாவிலிருந்து கோ- பைலட் இறங்க உத்தரவு வந்துவிட்டது. உலக வரலாறு ஒருநொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் ஆல்ட்ரினை இன்று யாருக்கும் தெரியவில்லை. முதலாவதாக வருபவரைத் தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல; தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கும் இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு.

ஒரு நிமிடத் தயக்கம் நம் மிகப்பெரும் வெற்றியை தடுத்துவிடும் அபாயம் நிறைந்தது. நம் சாதனையை முறியடிக்கும் முதல் எதிரி நம் தயக்கம் கூச்சம் பயம் இவையே. சுருதி மீட்டுவதிலேயே காலம் போகிறதோ... என்ற தாகூரின் வரிகள் சிந்தனைக்குரியது. நாதத்தின் தரத்தை காலம்தான் கணிக்க வேண்டும்.


கண்டவர் விண்டிலர்...

Friday, 10 April 2015 6 கருத்துரைகள்


சூரியப் பேரொளியில்
வானத்து நிறத்தையுடுத்தி
தகதகக்கிறது
அணைக்கட்டில் சுழித்தோடும் நதிநீர்.

பாதையில் முந்தைய நாள்
அடித்துப் பெய்த மழைச்சுவடு
சற்றுமற்று உருகிய தார்
செருப்பு தாண்டிச்  சூடேற்ற

நீர்த்தேக்க மதகுகளின் நிழல்விழும் பகுதியில்
நிற்குமென் பார்வையில்
மேம்பால ஏற்றத்தில்
மெதுமெதுவாய் ஊர்ந்திடுமோர்
ஊர்தியின் தூரக்காட்சி.

சுதந்திரதினக் கொண்டாட்டத்தில்
குழந்தைகள் குழாம் சேர்ந்தும் பிரிந்தும்
பல்லுருக் காட்டுதல் போல்
தொடுவானின் வெண்மேகங்கள்
கற்பனை கூட்ட

மதகுநிழலருகின் ஆழம்காணா நீரோட்டம்
மேற்பரப்பில் அலையடிக்கிறது சிலுசிலுப்பாய்
காற்றின் துணைகொண்டு...
சில பாய்மரப் படகுகளும் காற்றோட்டத்தில்
அசைந்தாடிச் செல்ல

எதிலிருக்கிறாய் நீ?
ஊர்தியின் எரிபொருளாகவா...
பாய்மரத் துடுப்பாகவா...
பஞ்சபூதங்களிலுமா?
தேடுமென்னுள்ளேயா..!


உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar