நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

விஷ்ணுபுரமும் சாகித்ய அகாதெமியும்...

Friday, 23 December 2016 5 கருத்துரைகள்
நான் இன்று ஒரு சுடுமண் இருக்காஞ் சட்டி விளக்கு.
நான் இன்று காய்த்துப் போன உள்ளங்கையுடன் ஒரு ஆதி மனுஷி 
திரித்த இலவம் பஞ்சுத் திரி.
நான் இன்று துயரிடைக் கசிந்த ஆனந்தத்தின் தைலம்.
நான் இன்று யாரின் அகல் தீயோ ஏற்றிய சுடர்.
நான் இன்று எல்லாச் சூறையையும் எதிர்கொண்ட ஒளித் தொடர்.
நான் இன்றைய கருக்கலில் எதிர்ப்படும் இன்னொரு திரியிடம் 
என்னை ஒப்படைத்து விடுவேன்.
******
என் தந்தை தச்சனில்லை.
எழுதுகிறவன்.
எனக்கு மரச்சிலுவை அல்ல
காகிதச் சிலுவை.
உயிர்த்தெழுதல் மூன்றாம் நாளல்ல
அன்றாடம்.
 - வண்ணதாசன் 
எனக்குத் தெரியும்...
இபபோதும்  எங்கோ, யாரோ 
வண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!
எம் ஆதர்ச எழுத்தாசானை  வாழ்த்துவதும் வணங்குவதும் இத்தருணப் பெருமிதம்! 
அவர் விருதுகள்  சூழ நிற்கும் இந்த டிசம்பர் உச்சி குளிர்விக்கிறது எம்மை! 

எப்படியிருக்கிறாய்?

Tuesday, 15 November 2016 3 கருத்துரைகள்

தாம் உதிர்த்த மலர்கள் சூழ
நிற்கும் மரம்போல
என் ஞாபகப் பரப்பெங்கும்
உனது வாசனையே

கூழாங்கல்லின் மழமழப்பும்
பூவிதழின் மெதுமெதுப்புமாக
சிலிர்க்கச் செய்கிறதென்னை
உன்
கைவிரல் நுனி தொடல்.

தன்னை அறியப் பிரயத்தனப்படும்
ஒவ்வொருவருக்கும்
தனித்தனி தெளிவு தரும்
ஜென் கவிதை நீயென்பேன்...

எளிதாய் யாரும் படித்திட உதவும்
கோனார் தமிழுரை நானென்கிறாய்!என்று தணியும்?

Friday, 11 November 2016 8 கருத்துரைகள்


நடுத்தட்டு மக்கள் 
இரவுபகலாக 
நடுத் தெருவில் ...

கோடிகளில் வரி ஏய்க்கும்
கொம்பன்கள் 
கதகதப்பாய் பஞ்சணையில்.

****************

பாடுபட்டுத் தேடிவந்த 
நூறு ரூபாய் நோட்டுகளை
'படக்'கென்று கிழித்துப் போட்ட 
ரெண்டு வயசு மகனின் 
முதுகு பழுத்தது முதன்முறையாக.

****************

தன் சேமிப்பின் கதியறிய 
கேட்கிறான் சிறு பையன்...
"நூறு ரூபாய் நோட்டெல்லாம் செல்லும் தானே?"
'நாளைய செலவுக்கு உண்டியல் இருக்கு'
வரிசை விட்டு வெளியேறுகிறாள் அம்மா.

*******************

அலைந்து திரிந்து ஓய்ந்தவர்களும்
நின்று நின்று கால் கடுத்தவர்களும் 
அடுத்த வேளை சோற்றுக்கு உதவாத 
கற்றைப் பணத்தை விட்டெறிய முடியாமல் 
பட்டினி வயிறு பற்றியெரிய 
சட்டென சபிக்கிறார்கள்...
செல்லாக் காசாக தம்மை  ஆக்கியவர்களை.

*******************அடி பொலி!

Wednesday, 27 July 2016 10 கருத்துரைகள்


இருக்கையில் அமர்ந்திருந்த கொசு
திடுமென்ற மின்விசிறி சுழற்சியால்
எழுந்து படபடத்து சுழல்கிறது

மறுபடி நினைவூட்டப்பட்ட
மறந்துபோனதொரு
வலிமிகு பொழுதைப் போல

ரீங்காரமிட்டபடி
ரத்தம் முழுக்க
உறிஞ்சியெடுக்கும்
தீராக்குரோதமுடன்
சுழலும் இக்கொசுவுக்கு
சற்றும் சளைத்ததில்லை
அந்நினைவுகளின் கொக்கரிப்பு

நசுக்கியெறி உன் வலிக்கொசுவை.
மகிழ்ச்சி!

எல்லா மரமும் போதிமரமாக...

Monday, 18 July 2016 4 கருத்துரைகள்


புத்தரின் புன்னகையும் அவர் பெற்ற ஞானமும் அவரை அறிந்தவர்களுக்கொரு பிரமிப்பைத் தரத்தக்கது. மூடிய கண்களின் தியான அமைதியும் விரிந்த இதழ்களின் ஓரப் புள்ளி கிளர்த்தும் தத்துவ விசாரமும் விசாலமான அறிவின் அறிவிப்பாக தொங்கிய காதுகளும் ஆயிரம் இதழ்கொண்ட தாமரையாக விரிந்த சகஸ்ரகாரச் சக்கரத்தின் புற அடையாளம் போன்ற உச்சிக் கொண்டையும் பார்ப்பவரை ஈர்க்கும் தன்மை கொண்டது. அவரது பூர்வாசிரமப் பெயரும் வரலாறும் நாமனைவரும் அறிந்ததே.
ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட(1922) ‘சித்தார்த்தன்' நாவல் நம் கெளதம புத்தரைப் பற்றியதல்ல. இந்தியாவின் கேரளமாநிலத்தில் தம் மூதாதையரின் வேர் பரவியிருக்க, ஜெர்மனியிலிருந்து கிழக்கிந்திய நாடுகளைச் சுற்றிப் பார்க்க வந்த (1912)ஹெர்மன் ஹெஸ்ஸே இலங்கை வழியாக இந்தியா வந்தபோது புத்தர் வரலாறு கேள்விப் பட்டு தம் மனதுள் தொடர்ந்து 10 வருடங்கள் ஒரு கதைக் கருவையும் அதற்கான கதாநாயகன் நம் புத்தரிலிருந்து மாறுபட்ட வாழ்வின் தேடலில் தன் ஞானத்தை தானே கண்டடையும் உத்தியையும் உருப்போட்டதன் விளைவே ‘சித்தார்த்தன்' என்றொரு புதினம். ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது இந்நாவல். ஆங்கிலத்தில் திரைப்படமாகவும் எடுக்கப் பட்டிருக்கிறது.
150 பக்கங்களுக்குள் மனித வாழ்வை அதன் தத்துவச் சரடை கொண்டுவர முடிந்திருக்கிறது அவருக்கு! பக்கங்களின் எண்ணிக்கையோ பிரம்மாண்டமோ தீர்மானிக்க முடியாத மகோன்னதம் அல்லவா படைத்தலின் உன்னதம்! பிரபஞ்சத்தின் கோடானுகோடி உயிரணுக்களும் சர்வ சாதாரணமாக உருவான இவ்வுலகில் மனித மனதின் அற்புதம் என்றென்றும் வியப்புக்குரியதே.
பிறப்பும் வாழ்வும் மரணமும் அனைத்து உயிர்களும் அடையத்தக்க எளிதானதாக இருப்பினும், பகுத்தறிவால் மனித நிலையடைந்த ஒவ்வொருவருக்கும் ஏதேனுமொரு தருணம் ஞானம் சித்திக்கிறது. அதனைக் கைப்பற்றி வாழ்வின் இரகசியங்களைத் தெளிந்திடும் இடம் அவரவருக்கான கயாவாகவும், வாழ்தலின் வலிமிகு வெம்மைகள் தணியும் தருநிழல் அவரவருக்கான போதிமரமாகவும் அமைந்து விடுகிறது.
இந்நாவலில்

நாவில் நிலைத்திடும் ருசி

Sunday, 10 July 2016 6 கருத்துரைகள்


               பல்வேறு சமையல் குறிப்புகளையும் வீட்டுப் பராமரிப்பு முறைகளையும் மாத சஞ்சிகைகளில் எனது திருமண வாழ்வின் 23 ஆண்டுகாலமாக ஒரு பார்வையில் கடந்ததுண்டு. கண்ணில் பட்டதில் கருத்தில் நின்றது அடுத்த தடவை அப்பதார்த்தங்கள் செய்யும் போது நினைவில் மின்னிக் கையாண்டு பார்த்ததும் உண்டு. இணையத்தின் வலைப்பூ பக்கங்களில் எப்போதேனும் எதற்கேனும் அரிதாக சமையல் பக்கங்களைத் தேடியதுண்டு.

               அம்மா வீட்டில் மேலோட்டமாகத் தெரிந்து வந்த சமையல், மாமியார் தன் கைப்பக்குவத்தால் வீட்டினரைக் கட்டிப் போட்டிருந்த இலாவகம் பழகி நாளடைவில் கணவர், குழந்தைகளின் ருசி நாக்கால் சுவையேற்றியது எனக்கு.

               ஐந்தறிவு உயிர்கள் தம் பசிக்கு விதிக்கப் பட்டிருந்த இரையை உண்டு உயிர் தரித்திருக்க, ஆறறிவு மனிதன் தன் உயிர் வாழ்தலின் அத்தியாவசியமான உணவை வேக வைத்து, வறுத்துப் பொரித்து, சுட்டு சுவையேற்றி...

பல் 'ஆண்டு' வாழ்க!

Thursday, 28 April 2016 8 கருத்துரைகள்

      சில நாட்களுக்கு முன் ஏதோ சாப்பிடும் போது வலது மேல் கடைவாய்ப் பல் ஒரு மூலையில் மளுக் என உடைந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்பே இடது மேல் வரிசையில் ஒரு பல்லுக்கு வேர் சிகிச்சையளித்த பல் மருத்துவர் அப்போதே எச்சரித்திருந்தார். கடைவாய்ப் பல்லில் சொத்தை வந்திருக்கிறது. சில நாட்கள் கழித்து வாங்க, எடுத்திடலாம் என்று.

ஊஞ்சல் நேரங்கள்

Friday, 22 April 2016 10 கருத்துரைகள்
     
 நேத்து கனவில் அப்பா வந்தாருங்க... என்றேன் இவரிடம். இவருக்கு அப்பா. எனக்கும் அப்பாவாக இருந்தவர் தானே...

       உடலற்றுப் போன அவரை, கனவில் உடம்பும் உசிருமான இருப்பில் பார்த்த நெகிழ்வில் மனசெங்கும் ஒரு பரவசம். காலைமுதலே அவரைப் பற்றிய நினைவலைகள். காதில் சங்கை வைத்து அதில் கடலோசையை கேட்டு சிலிர்த்து, பக்கத்திலிருப்பவர் காதிலும் வைத்து கேட்கத் தூண்டுவது போல இவரிடம் பகிர, அப்படியா... எனக்கு அடிக்கடி வருவார் என்றார்.

      சமையல் சாப்பாடெல்லாம் முடிந்து, இவர் மதியப் பணிக்கு சென்றபின், வண்ணதாசனின் ‘அகம்புறம்' எடுத்தமர்ந்தேன். யார்கிட்டேயாவது பேசணும் போலவோ, எதையேனும் கேட்கணும் போலவோ இருக்கும் போதெல்லாம் புத்தகமே உற்றதுணை. அதிலும் மனதோடு பேச வண்ணதாசன் எழுத்துக்கள் வெகு இதம் அல்லவா...!

       இப்போதுதான் புதிதாகப் படிக்கத் துவங்குவது போல் தலைப்பிலிருந்து துவங்கினேன்.

      முதல் பக்கத்தில் “ஈடு இணையற்ற அன்பிற்கு...” என்றெழுதி அன்பளித்திருந்த உஷாவின் கையொப்பம், தேதியோடு.  தற்போது தொடர்பு எல்லைக்கு வெகு அப்பாலிருக்கும் அந்த நேசத்தின் சீமாட்டியை சுற்றிடத் தொடங்கியது தடம் மாறிய என் நினைவலைகள். அவரையே நேரில் பார்ப்பது போலும் பலவற்றையும் பேச்சிலும் எழுத்திலும் பகிர்வது போலவுமான நிறைவைத் தரும் வல்லமை பெற்றிருந்தது அவ்விரு வரிகள்.

       பக்கத்தின் எஞ்சிய வெற்றிடத்தில்

மறத்தலும் மன்னித்தலும்....

Tuesday, 19 April 2016 7 கருத்துரைகள்


 1.      திருப்பனந்தாள் - ஆடுதுறை வழியில் முட்டகுடி அருகில் திருவெள்ளியக்குடி கோலவில்லி ராமர் கோயிலுக்கு  சென்றோம். அன்று ஸ்ரீ ராம நவமி. காலை வேளையில் வாசலில் ஓரிருவர் வரவும் போகவுமாக இலேசான சந்தடி.

      கோபுர நுழைவாயிலில் ஒரு எளியவர் கையேந்த,

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar