நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

ஆறாம் அறிவின் பாதகம்

Tuesday, 28 February 2017 10 கருத்துரைகள்
நன்றி:
http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html

விதவிதமான வினாயகர் உருவங்கள்
சிரிக்கும் புத்தர் சிலைகள்
குபேர பொம்மைகள்
கொஞ்சும் சதங்கைகள்
வண்ணவண்ண மணித்திரள்கள்
இலைகள், பூக்கள், கனிக்கூட்டங்கள்
உலகின் ஒட்டுமொத்த
போன்சாய் உருவங்களாக
சாவிக்கொத்துகளின் ஆதிக்கங்கள்.

கோர்க்கப்படும் சாவிகளுக்கு
அணைவாய் இருக்க போட்டா போட்டிகள்
ஒவ்வொருவர் கையிருப்பிலும்
அவரவர் ஆளுகைக்கு உட்பட்டவற்றின்
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரணாய்
விதவிதமான பூட்டுகளின் திறப்பான்கள்

ஒரே வளையதிலிருப்பினும்
வெவ்வேறு மதிப்புகள் ஒவ்வொன்றுக்கும்
வீட்டுக்கு ஒரு பூட்டு
ஒவ்வொரு அறைக்கதவுக்கும் ஒவ்வொன்று
வாகனங்களுக்குத் தனித்தனி
சொந்த வியாபாரத் தலங்களுக்கும் அப்படியே
வேலையிடத்தின் பதவிக்குத் தக்கன
வங்கிகளில் வாயில்காப்போனிடம்
வாசல் கதவுக்கென்றால்
மேலதிகாரிக்கு அலுவலக மேசை மற்றும்
பெட்டக அறைத் திறப்பான்...

எல்லா சாவிகளுக்கும் போலிகள் உண்டு
உரிமையாளரிடம் மட்டுமல்ல
கண்ணி வைத்து திருடும் கயவர்களிடமும்.
கணினியுகத்தில் பாஸ்வேர்டுகளும்
அதையுடைக்கும் எத்தர்களும் ...

அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதவராக
அனைவருமிருந்தால் பூட்டுதானெதற்கு?
சாவியுமெதற்கு??

பிரபஞ்சத்தின் ஐந்தறிவு வரை ஜீவராசிகளுக்கு
பூட்டுமில்லை; சாவியுமில்லை; சாவிக்கொத்துகளுமில்லை!

சிருங்காரி

Tuesday, 21 February 2017 14 கருத்துரைகள்
நன்றி: http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html


தட்டுசுற்றா உடுத்தியிருக்கும்  செல்லம்மா-உன்
தலைச்சுமையா இருப்பதுவும் என்னம்மா
கோணக் கொண்டைக்காரி
கொள்ளைச் சிரிப்புக்காரி
கைவளை கலகலக்க
கட்டுடல் பளபளக்க
என் கண்ணைப் பறிக்குறடி கண்ணம்மா
உன் காலுக்கு செருப்பா நான் வரட்டுமா?

முதல் குண்டு கூழ்ப்பானை
அதுக்கு மேல மோர்ப்பானை
மூணாவதா நெல்லுச்சோறு
நெத்திலிக் குழம்பு அடுத்ததில
மிச்சத்துல வகையான வெஞ்சனம்
தலைக்கு மேல சுமக்கறது சொல்லிட்டேன்
மனசுக்குள்ள இருக்குறத சொல்லட்டா?

உச்சியில ஏறி உள்ளங்காலைக் கொதிப்பேத்தும்
ஒத்தைக் கண்ணன் சாயட்டும் மேற்கே
உழவும் பறம்படியும் முடிஞ்சிடும் அங்கே
பொழுதடங்க வந்துடுவோம் நாங்க
புடிச்சிருந்தா பொண்ணு கேட்டு
வீடுதேடி வாங்க
இப்ப வழிய விட்டு ஓரமாப் போங்க.

பழமாகிறாய் நீ ... மரமாகிறேன் நான்!

Monday, 13 February 2017 10 கருத்துரைகள்


விரிந்த தன் இலைகளில் பச்சையம் வற்றி
செம்மைதூக்கலான
மஞ்சள் நிறமடர்ந்த
வாதாம் மரத்தின் திலக வடிவ இலைகள்
தடக் தடக் என
இரவும் பகலும் உதிர்ந்தபடி இருக்க
மரத்தடியில்
கிளைபடர்ந்த தூரம் வரை
மண்மூடிக் கிடக்கும் இலைமெத்தையில்
ஒய்யாரமாய் அமர்ந்து
விருந்தாகிறாய்
என் புகைப்படக் கருவிக்கு.
வெற்றுக் கிளைகளின் இடைவெளியில்
எட்டிப்பார்க்கும் கதிரவனால்
ஒளி பிரகாசிக்கும் உன் வதனம்
இனி துளிர்த்துப் பூத்துக் காய்த்துக் கனியாகும்
வாதாம் பழ நிறத்தை நினைவூட்டி
வனப்புடையதாக்கியது புகைப்படத்தை.

பேசி மாளாப் பொழுது

Friday, 10 February 2017 9 கருத்துரைகள்
பட உதவி: http://venkatnagaraj.blogspot.com/
நூறுநாள் வேலையில் தூர்வாரிய ஏரி இது
கிடக்கும் சொற்ப நீரை
இயந்திரம் கொண்டு உறிஞ்சியே
கருகும் பயிரைக் காப்பாற்றப் பார்க்கிறோம்

அப்பன் பாட்டன் காலத்தில்
முப்போக வெள்ளாமை.
வண்டிமாடுகள் ஓய்ச்சலின்றி
வீட்டுக்கும் வயலுக்குமாக
நடைபோட்டபடி இருந்தன

வாய்க்கால் பாசனமற்று வானமும் கருமியானதில்
பஞ்சம் தலைமீற ஏர்மாடுகள் விற்று உயிர்வாழ்ந்தோம்
அப்புறம் வண்டியிழுக்கும் காளைகளும்விலைபோயின

எஞ்சிய வண்டியிது
தம் பயண அனுபவங்களை
சக்கரங்கள் கடையாணிகளுடன் கதைத்துப் பொழுதோட்டும்.
உளுத்துப் போகும்முன் அடுப்புக்கு விறகாகும்.

கஞ்சிக்கு வழியற்றும்
கெளரவம் பார்த்து
ஏதோவொரு விதையை பூமியில் விசிறிவிட்டு
சாவு வரும் பாதை தேடி
தவிக்கும் உழவன் வாழ்வை
பாழும் தெய்வமும் பார்த்து இரங்கவில்லை
ஆளும் அரசுக்கும் ஆயிரம் சொந்தவேலை. 

முகிலில் மறைந்த நிலா

Tuesday, 7 February 2017 10 கருத்துரைகள்
பட உதவி: வெங்கட் நாகராஜ் 
உடைக்குப் பொருத்தமாய்
வளையல், நகப்பூச்சு, கொண்டையூசி
எல்லாம் அழகுதான்.
உன் வெள்ளைப் பல்லிலும்
பஞ்சு முட்டாய் தின்று படிந்த
பக்கி ரோஸ் கலர் பிரமாதமென்றேன்
நாணிக் கவிழ்கிறாய் தோழியின் தோளில்.  அஞ்சும் மூணும் ...

Saturday, 4 February 2017 14 கருத்துரைகள்


எங்க பாட்டி சொல்வாங்க, (ஆமாப்பா... நமக்கும் வயசாகிப் போச்சு)‘அஞ்சும் மூணும் சரியா இருந்தா அறியாப் பிள்ளையும் கறி சமைக்கும்'.

சொலவடைகளும் பழமொழிகளும் சரளமாக பேச்சிடையே சொல்வது அவரது பழக்கம். பலவற்றுக்கு விளக்கம் கிடைக்கும்.

‘அப்படீன்னா?' அறியாப் பருவக் கேள்வி.

‘போடறத போட்டு செய்யற விதமா செஞ்சா தான் சமையல் மணக்கும்; ருசிக்கும்.'

‘அது சரி. அந்த அஞ்சும் மூணும் என்னென்ன?'

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar